Menu Content/Inhalt
முகப்பு arrow தாயகவலம் arrow வணபிதா ஒருவர் காணாமல்...

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

வணபிதா ஒருவர் காணாமல்...
வன்னியில் இடம்பெற்ற பேரவலத்தின் போது இறுதிவரை மக்களொடு தங்கியிருந்து பணியாற்றி வந்திருந்த வணபிதா ஒருவர் காணாமல் போயிருப்பதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. புனித பத்திரிசியார் (சென் பற்றிக்ஸ்) கல்லூரியினது முன்னாள் அதிபராக இருந்தவரும் வட கிழக்கு கல்வி மேம்பாட்டுக்கான அமைப்பினது தலைவராகப் பணியாற்றி வந்திருந்தவருமான 70 வயதுடைய வண பிதா பிரான்சிஸ் ஜோசப் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சொந்த இடமாகக்  கொண்டவர் ஆவார். வன்னியில் பணியாற்றி வந்த இவர் கிளிநொச்சி அம்பாள்குளம் தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார். இறுதிவரை வன்னியில் புதுமாத்தாளன் வரை தனது சக கத்தோலிக்க மத குருக்களுடன் இடம்பெயர்ந்து சென்றிருந்த இவர் இறுதியாக புதுமாத்தளான் பகுதியில் இடம்பெற்ற நடவடிக்கையின் பின்னர் வன்னியில் இருந்து அவர் பற்றிய தகவல்கள் எவையும் கிட்டியிருக்கவில்லை என ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. 
 
பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரது நிலை பற்றிய தகவல்களைப் பெற்றுத் தருமாறு பல தரப்புகளையும் ஆயர் இல்லம் கோரியிருக்கின்றது. இதனிடையே வன்னியில் இறுதிவரை அப்பகுதி மக்களுடன் நின்று பணியாற்றிய மற்றுமொரு பங்குத் தந்தை இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு சென்ற வேளை மாரடைப்பினால் உயரிழந்துள்ளார். 41 வயதான மரியாம்பிள்ளை சரத் ஜீவன் எனும் வணபிதாவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறுதிவரை வன்னி மக்களுடன் இவர் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

globaltamilnews.net
2009-05-28
 

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.