Menu Content/Inhalt
முகப்பு arrow உலகவலம் arrow தென்னாபிரிக்க பேராயர்....

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

தென்னாபிரிக்க பேராயர்....
Imageஇலங்கையின் வடக்கு பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்: தென்னாபிரிக்க பேராயர் டுட்டு

தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மன் டுட்டு உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடித்தில் இலங்கையின் வடக்கில் நிலவுகின்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு  பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் நாடு என்ற வகையில், இலங்கையில் இடம்பெற்று வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு காண இந்த வலியுறுத்தலை விடுக்க வேண்டியது அவசியம் என அவர் அந்த கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த பிரதேசத்தில் மனிதாபிமானத்;தை நிலை நாட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை உடனடியாக முனைப்பான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இலங்கை அரசாங்கம், சர்வதேச கண்காணிப்பாளர்களையும், ஊடகவியலாளர்களையும் மோதல் இடம்பெறும் பிரதேசங்களுக்குள் அனுமதிக்காத நிலையில் அங்கிருந்து உண்மையான தகவல்கள் வெளியாவதில்லை எனவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல்களினாலும், மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாமையினாலும் மோசமாக பாதிப்படைகின்ற பொது மக்களை பாதுகாக்க, ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மன் டுட்டு தமது கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி:
தமிழ்வின்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2009, 12:40.11 PM GMT +05:30 ]

 

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.