Menu Content/Inhalt
முகப்பு arrow தாயகவலம் arrow வன்னி மக்களின் அவலங்களை...

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

வன்னி மக்களின் அவலங்களை...
வன்னி மக்களின் அவலங்களை கண்டு உலக அமைப்புகள் மௌனம் கொள்வது கவலையளிப்பதாக யாழ்ப்பாண கத்தோலிக்க குருமார் தெரிவித்துள்ளனர்.
Image
இலங்கையின் வன்னியில் தொடருகின்ற மனித அவலத்தைக்கண்டு சர்வதேசமும் உலக மனிதாபிமான அமைப்புகளும் அமைதியாயிருப்பது குறித்து தாம் கவலைக்கொள்வதாக யாழ்ப்பாண கத்தோலிக்க குருமார் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் இடம்பெறுகின்ற அவலங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனக்கோரி குருமார் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்று ஆரம்பித்த உண்ணாவிரத நிகழ்வின் போது இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு மனு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

இன்றைய முதல்நாள் உண்ணாவிரதம் யாழ்ப்பாண ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகத்தின் தலைமையில் இடம்பெற்றது.

வன்னியில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 400 பொதுமக்கள் பலியாகினர். 1400 பேர் காயமடைந்தனர். இந்ததொகை பதிவுசெய்யப்பட்டதாகும். எனினும் இந்த தொகை அதிகம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ வசதிகள் குறைந்துபோயுள்ளன. இதனால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இந்தநிலையில் வன்னி மக்களின் அவலங்களை போக்க சர்வதேசம் முன்வரவேண்டும் என இன்றைய நிகழ்வின் போது அனுப்பப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது.

Image

Image

Image

Image

Image

நன்றி:
தமிழ்வின்
[ புதன்கிழமை, 28 சனவரி 2009, 10:57.26 AM GMT +05:30 ]

 

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.