| ஒளிவிழா 2005 |
|
முதன்முறையாக எமது ஆன்மீகசபையினால் 30.12.2005 அன்று Oslo Folkethus இல் ஒளிவிழா கொண்டாடப்பட்டது. 1992ம் ஆண்டு கத்தோலிக்க தமிழ் இளைஞர் ஓன்றியத்தால் ஆரம்பிக்கபட்ட ஒளிவிழா இன்றும் தொடர்ந்து எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்விழா எமது பங்குத்தந்தை இன்பநாதனால் முன்னெடுக்கப்படும் இரண்டாவது ஒளிவிழா அத்துடன் ழுளடழ புதிய ஆயர்பதவியேற்று அவர் எமது மக்களை சந்திக்கும் முதல் நிகழ்வு. சரியாக 6.04 க்கு எமது ஒளிவிழா நிகழ்வுகள் புதிய ஆயர் வருகையுடன் எமது மக்களால் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டு ஆரம்பிக்கபட்டது. இளையவர்களின் ஆரம்ப கீதத்துடன் மங்கலஒளிஏற்றி bible வழிபாட்டுடன் எமது நிகழ்வுகள் ஆரம்பமாகின. அடுத்தாக opening ceremony சுனாமி நினைவு, தீபநடனம் சிறப்புரை, நடனங்கள், நாடகங்கள் என சிறப்பாக இசை நிகழ்வுடன் நிறைவுபெற்றது. இம்முறை 900 க்கு மேற்பட்ட மக்கள் ஒளிவிழாவிற்கு வருகைதந்திருந்தார்கள். சிறுவர் நாடகத்தில் 56 பிள்ளைகள் பங்குபற்றியிருந்தார்கள். |
ஓளிவிழா 2005 